தல வரலாறு

திருக்குடந்தை – பாஸ்கரஷேத்திரம் என்றழைக்கப்படுவது கும்பகோணம். சென்னை – திருச்சி முக்கிய புகைவண்டித்தடத்தில் சென்னையிலிருந்து சுமார் 310 கி.மீ தெற்கேயும் தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ வடகிழக்கேயும் அமைந்துள்ள பெருநகரம் குடந்தை. வடக்கே காவியும் தெற்கில் அரிசொல் ஆறும். அழகு சேர்க்கும் இந்நகரில் கோயில் கொண்டுள்ள பெருமாளே ஸ்ரீ சார்ங்பாணிசுவாமி ஆகும்.”சார்ங்கஙம்”என்னும் வில்லை கையில் ஏந்திய நிலையில் “சார்ங்கபாணி” யாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார் பெருமாள்.


இத்திருத்தலமானது திருவரங்கம் திருப்பதி ஆகிய திவ்யதிருத்தலங்களுக்கு நிகராக க்ஷ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமையுடையதாகும். ஹேமரிஷியின் பத்தினியாக பொற்றாமரை திருக்குளத்தில் அவதரித்த கோமளவல்லித் தாயாரை மணம்புரிய வேண்டி பெருமான் வைகுண்டத்திலிருந்து இரதத்துடன் எழுந்தருளியதாக ஐதீகம் மூலவர் சந்நிதியே கலைநயம் மிக்க கல் ரதமாகவும் அமைந்திருப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு அதனைத் திருமங்கை யார்வாழ் “ திருவெழுகூற்றருக்கை” என்ற தனிப்பிரபந்ததில் ரத பந்தக்கவியாக அனுபவத்துப்பாடியுள்ளார் 147 அடி உயரத்தில் 11 நிலைகளையும் நடனக்கலையின் 108 கரணங்களை உள்ளடக்கியதாக காலத்தால் அழியாத கலைபெட்டகமாக அழகிய இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராமாயண மகாபாரத காவியங்களை விளக்ககூடிய சிற்பங்களைதன்னகத்தே கொண்டு பழமைக்கும் மூலவர் சன்னதியின் வெளிச்சுற்று மற்றும் இரா தென்னத்தின் பண்பாடு கலாச்சாரத்திற்கும் சான்றாக இத்திருக்கோயில் விளங்குகிறது.


இத்திருக்கோயிலின் வானளாவிய இராஜகோபுரத்தினை கட்ட ஆரம்பித்து அப்பணி முடியும் வரை திருமணமே செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவேயிருந்து ராஜகோபுர திருப்பணியை நிறைவு செய்து இயற்கை எய்தியவர் ஸ்ரீ லெட்சுமி நாராயணஸ்வாமி என்ற வைணவ பெரியவர். அன்னாருக்கு வாரிசு இல்லாததால் அன்னாரது அந்திமக்கிரியைகளை நிறைவேற்ற பெருமாளே பிள்ளையாக வந்து கைங்கர்யம் செய்வித்ததாக வரலாறு.


அவ்வரலாற்றை நினைவுகூறும் முகமாக இன்றும் ஐப்பசிமாத அமாவாசை தினத்தன்று பெருமாளே எழுந்தருளி கைங்கர்யம் செய்விப்பது கண்கொள்ளாகாட்சியாகவும் அடியவர்பால் அவர்காட்டி வரும் கருணைக்கு சாட்சியாகவும் அமைந்துள்ளது. பெருமாள் வைகுண்டத்திலிருந்து தன் சேனைகளுடன் ரதத்துடன் எழுந்தருளி தாயாரைத்திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் “பூலோக நித்யவைகுண்டம்” என போற்றப்படுகிறது. ஆதலால் பிற வைணவத்தலங்களைப்போல் வைகுண்ட ஏகாதசி அன்று தனி சொர்க்கவாசல் கிடையாது.


ஆழ்வார்களின் பாசுரங்களால் பெருமை பெற்ற 108 திருக்கோயில்கள் தான் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகிறது. அருளாளர்கள் பெரிதும் போற்றும் நாலாயிரத்திவ்யபிரபந்தத்தில் “ஆராவமுதே” என அழைக்கும் 10 பாசுரங்கள் இத்திருத்தலத்தில் மட்டுமே பாராயணம் செய்யப்பட்டு வந்தன.


இவ்வாறு ஆரம்பத்தில் இத்திருத்தலத்தில் இசைக்கப்பட்டு வந்த 10 பிரபந்த பாசுரங்கள் வாயிலாகவே ஏனைய 3990 பாசுரங்களும் கிடைக்கப்பெற்றது வரலாறு. அவ்வகையில் வைணவ வேதமாக கருதப்படும் நாலாயிரத்திவ்யபிரபந்தம் தமிர்கூறும் நல்லுலகுக்கு முழுமையாகக் கிடைக்கச்செய்த பெருமையும் இத்தலத்திற்கே சேரும். திருமங்கையாழ்வார் தனது கடைசி பாசுரத்தில் “அருமனையை வெளிப்படுத்த அம்மான் தன்னை “ திராவிட ஸ்ருதிதர்ச்சாய நம” என்று இன்றும் அர்ச்சனை செய்யப்பட்டுக்கொண்டிருப்பது கண்கூடு.


ஆழ்வார்களின் தலைவராய்த் திகழ்பவர் நம்மாழ்வார். வைணவ சித்தாந்தத்தின் ஆனவேரான சரணாகதி தத்துவத்தை எடுத்தியம்பும் வகையில் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் இசைவித்தென்னை உன்தான்னைக்கீழ் இருந்தும் அம்மானே என்றும் குடந்தை எங்கோவலன் குடியடியார்க்கே என்றும் பாடியுள்ளார்.

இத்திருக்கோயிலின் அத்யயன உத்ஸமதகிய ராபத்து உத்ஸ்வ 5-ம் திருநாள் அன்று பிரதி வருடம் மார்கழி 15ம் தேதி இரவு பரமபதநாதன் சேவை தினத்தில் ஸ்ரீ தேவி பூமிதேவி நாச்சியார்களுடன் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வார்க்கு மோட்சமளிக்கும் கண்கொள்ளாக்காட்சியினை இத்தலத்தில் இன்றளவும் கண்டு ஆனந்திக்க இயலும்.பாதாள சீனிவாசன் சந்நிதி

திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளே குருமகரிஷிகாலத்தில் அங்கிருந்து திருக்குடந்தைக்கு எழுந்தருளி சிலகாலம் வாசம் செய்ததாக தலப்புராணம் கூறுகிறது. இன்றும் இத்திருக்கோயிலில் நிலவரைக்கு கீழ் உள்ள பாதாள சீனிவாசன் சந்நிதி இந்நிகழ்ச்சிக்கு சான்றாக உள்ளது.சந்தானகிருஷ்ணன் மகிமை

மகப்பேருகிட்டாத தம்பதியர் இத்திருக்கோயிலின் பெருமாள் சந்நதியில் உள்ள ஸ்ரீ சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தினை பிராத்தித்து பூஜைசெய்வதன் மூலம் புத்திரபாக்கியம் பெற்று சகல ஐஸ்வர்யத்துடன் விளங்குவர் என்பது நம்பிக்கை. தமிழகத்திலிருந்து மட்டுமன்றி பிறமாநிலத்திலிருந்தும் இப்பிரார்ததனையை மக்கள் நிறைவேற்றி வருவதே இதனை உறுதி செய்ய போதுமானது.

செல்வம் மல்குதென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழீயுடன் வணங்க “ஆடவர அமளியில் அந்தியில் அமர்ந்தபுரம் நின் அடியினை பணிவன் வரும் இடர் அகல மற்றோர் வினையே” என்ற திருமங்கையாழ்வாரின் பாடலுக்கிணங்க இந்த பெருமாள் தாயாரைத் துதிப்பவர்கள் யாவரும் இப்பிறப்பு மட்டுமன்றி எப்பிறவியிலும் உயர்வுற்று வாழ்வார் என்பதில் எத்துணையும் ஐயமில்லை.