திருக்குளம்தீர்த்தங்கள்

Pic 1

..............

Pic 2

.......

Pic 3                             

திருக்கோயிலின் பின்புறம் மேலைக்கோபுரவாயிலின் வெளிப்புறம் அழகிய அகன்ற பொற்றாமறைக் குளமும் குளத்தின் மையமாக கலைநயத்துடன் அமையப்பெற்ற நீராழி மண்டபமும் உள்ளது. திருக்குளத்தின் வடகரையில் கோமளவல்லி தாயாருக்கும் ஹேமமகரிஷிக்கும் சன்னதிகளும் நான்கு மூலைகளிலும் நாலுகால் மண்டபங்களும் அமைந்துள்ளன.


கி.பி.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரத்தின் பின்வரும் பாடல் இத்திருக்குளத்தின் தொன்மையையும் சிறப்பையும் சொல்லப்போதுமானது.“ தாவிமுதற்காவிரி நல்யமுனை கங்கை
சரஸ்வதி பொற்றாமரை புட்கரனி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்தே
குடந்தைக்கீழ்க் கோட்டத்து எம்கூத்தனாரே”.


கலியுக முடிவில் பிரளயம் ஏற்பட்ட போது பிரம்மன் மேருமலையில் வைத்த (கலசம்) குடத்தினின்று பெருகிய அமுதவெள்ளம் இரண்டு வாவிகளில் தேங்கிநின்றது. அவ்விருவிகளில் ஒன்று மகாமகக்குளம் மற்றொன்று பொற்றாமரைக் குளம் என்பர். ஆதலால் இக்குளம் “அமுதவாவி” “பொற்றாமரை புட்கரணி”எனவும் அழைக்கப்படுகிறது.


இவ்வாறு மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு பெற்றது இத்திருக்கோயிலாகும்.