சேவைகள்

அன்னதானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப இத்திருக்கோயிலில் தினசரி மதியம் 12.15 மணிக்கு 100 (நூறு) பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான தர்மத்தில் தாங்களும் இணைய ஒரு நாள் அன்னதான கட்டளை உபயம் மற்றும் அனைத்து நன்கொடைகள், விசாரணைகளுக்குநிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளவும். அன்னதானம் என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது.2011 ஆம் ஆண்டு தமிழக அரசு கோவில்களில் அன்னதான திட்டம் என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்ற கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் தர வழி வகுக்கப்பட்டது. [2] இதன் அடிப்படையில் குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 100 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.